கனடா டொரெண்டோ பகுதியில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
TTC பேருந்தில் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக 47 வயதான தமிழர் ஒருவரை டொரெண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முதலாவது சம்பவம் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பேருந்தில் பயணித்த 15 வயதான சிறுமிக்கு பின்னால் நின்ற குறித்த நபர் அவரிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கு அடுத்த நாள் மாலை 5 மணி முதல் 5.30 வரையிலான காலப்பகுதியினுள் மேலும் 3 இளம் பெண்களிடம் அதே முறையில் பாலியல் சேட்டையில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்த சம்பங்களுக்கு பின்னர் அடுத்த நாள் பொலிஸார் காத்திருந்து குறித்த நபரை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த 4 குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் 47 வயதான கேதிஸ்வரன் ஷண்முகநாதன் என்ற 47 வயதான தமிழர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.