மூன்று மாதங்களை வீணடித்த ஆர்யா; குற்றம் சாட்டும் சுசானா.!

பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். அதிலிருந்த சில பெண்களை எலிமினேட் செய்து வருகிறார். தற்போது அகாதா, சுசானா, சீதாலட்சுமி என 3 பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். இந்த மூவரில் ஒருவரை மட்டும் தான் ஆர்யா திருமணம் செய்ய போகிறார் என்று சிந்தித்த நிலையில், தான் யாரையும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன்.

ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொண்டால் மற்ற இருவரும் நிலை என்று கூறி மேடையிலேயே அழுதுவிட்டார். இவர் அழுததால் மக்களும் இவர் கூறுவதும் சரி தான் என்று இவரது முடிவுக்கே விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுசானா அவரது நாட்டிற்கு திரும்பிவிட்டார். நாடு திரும்பிய சுசானா ஒரு பதிவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: முதலில் அனைவர்க்கும் நன்றி, இந்த மூன்று மாதங்கள் எனக்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றி.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இந்த நிகழ்ச்சியில் நான் பங்கு கொண்டேன். ஆனால் உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி முடிவு மகிழ்ச்சி இல்லை. மூன்று மாதங்களை முழுமையாக வீணடித்துவிட்டோம் என்பது தான் உண்மை. என்ன நடந்தாலும் அதை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான் உண்மை. இந்தியா என்னை நன்றாக கவனித்து. ஆனால் என்றும் கனடாவை நான் மிஸ் செய்தேன். மிகவும் மகிழ்கிறேன் திரும்ப கனடா வந்தடைந்தது.