அழிந்து போனதாக கருதப்பட்ட சுறா மீன் தற்போது கங்கை நதியில் கிடைத்திருப்பது பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள மார்க்கெட்டிற்கு பல்கலைக்கழகம் மாணவன் எப்போதும் போல் மீன் வாங்க சென்றுள்ளார். அப்போது அழிந்து போனதாக கருதப்பட்ட சுறா மீனைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.
சுமார் 8 அடி நீளம் கொண்ட இந்த சுறா மீன் கங்கை நதிகளில் மட்டுமே முன்பு காணப்பட்டது. இறுதியாக கடந்த 1996-ஆம் ஆண்டு மற்றும் 2006-ஆம் ஆண் டுகளில் இந்த வகை சுறா மீன்கள் காணப்பட்டன.
அதன் பின் இந்த வகை சுறா மீன்கள் இந்திய கடல்களில் காணப்படாமல் இருந்தது. இதனால் இந்த வகை உயிரினங்கள் அழிந்துவிட்டதாகவும், இது ஒரு அழிந்து வரும் உயிரினம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த மாணவன் இந்த சுறா மீன் தொடர்பான புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் சுறா மீனின் கூர்மையான பற்கள் மற்றும் அதன் நீளமான தோற்றம் போன்றவைகளையும் பதிவேற்றம் செய்திருந்தார்.
இதை கண்ட கடல் வாழ் இனங்களை ஆராய்ச்சி செய்பவர்கள் அந்த மீன் குறித்து உடல் பாகங்கள் கிடைத்திருந்தால், அதைப் பற்றிய தற்போதைய விடயங்களை தெரிந்திருக்கலாம்.
ஆனால் அந்த மீன் வந்தவுடன் மக்கள் ஏலத்தில் போட்டி போட்டு வாங்கியதாக அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளதால், அதைப் பற்றிய முழு விபரம் தெரியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளனர்.