மெரினா கடலில் குளித்தால் ஆபத்து ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், எண்ணூர், கோவளம் ஆகிய 5 கடற்கரைகளில் இருந்து 192 மாதிரிகளை சேகரித்து, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் மெரினாவில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரில் அதிக அளவில் பாக்டீரியா இருந்தது தெரியவந்துள்ளது.
ஆனால், கோவளம் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரில் குறைந்த அளவு மாசு கலந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றுவதே கடல் நீர் மாசுபடாமல் தடுக்க ஒரே வழி என மத்திய கடல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நுண்கிருமிகள் நீரில் கலப்பதால் வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்னை, வாந்தி, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது