அற்புத பலன்கள் தரும் அரிசி கஞ்சி!

நம்மில் பலர், சாதம் வடித்த கஞ்சியை வேண்டாத பொருளாக நினைத்து கொட்டி வருகிறோம். ஆனால், அதில் நிறைந்துள்ள பலன்கள் ஏராளம்.

அரிசி கஞ்சி தரும் ஆரோக்கியம்

  • ஒரு டம்ளர் அரிசி கஞ்சியில், சிறிது மோர் கலந்து குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும், உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரிசெய்யும்.
  • அரிசி கஞ்சியுடன் சிறிதளவு புதினா, சீரகத்தூள் கலந்து குடித்தால் ஜீரண சக்தி பெருகும். அரிசி கஞ்சியில் வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளதால் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களின் உடல் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
  • பசியை தூண்டுவதற்கு பழச்சாறுகள் அருந்துவதற்கு பதிலாக, அரிசி கஞ்சியை பருகலாம். ஏனெனில் இதுவும் பசியை தூண்டுவதோடு, செரிமானத்திற்கும் வழிவகுக்கும். இதனுடன் சீரகம் சேர்த்து பருகுவது மிக நன்று.
  • இட்லிக்கு மாவு அரைக்கும்போது, அரிசி கஞ்சியையும் கொஞ்சம் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.

மருத்துவ பயன்கள் மற்றும் இதர பயன்கள்

  • அரிசி கஞ்சியுடன் திராட்சை பழங்களை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர, முகம் பளிச்சென்று மிளிரும்.
  • சொறி, சிரங்கு உள்ள இடங்களில் ஒரு பருத்தி துணியை கஞ்சியில் நனைத்து கட்டி வர, ரணம் ஆறிவிடும். தீக்காயம் ஏற்பட்டாலும் அரிசி கஞ்சியைப் பயன்படுத்தலாம்.
  • வெளியில் செல்லும் முன்னர், அரிசி கஞ்சியை கொஞ்சம் உடலில் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து கழுவி விட்டு பிறகு வெளியில் செல்லலாம். அவ்வாறு செய்தால் புற ஊதா கதிர்களின் தாக்குதலில் இருந்து நம் உடல் பாதுகாக்கப்படும்.
  • தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க அரிசி கஞ்சி உதவும். நமது உடலில் நெற்றி, கழுத்து, கை, முகம் போன்ற இடங்களில் தேய்த்து வருவதன் மூலம் வயதான தோற்றத்தை தவிர்க்கலாம்.
  • வேர்க்குரு பிரச்சனைகளுக்கும் அரிசி கஞ்சியின் மூலம் தீர்வு கிடைக்கும்.
  • கால்வலியால் அவதிப்படுபவர்கள், அரிசி கஞ்சியுடன் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முக்கி வைக்க வேண்டும். அதன் பின்னர் கால் வலி குறையும்.
  • அரிசி கஞ்சியை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். மேலும், தலையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவும்.