காஷ்மீரை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவர் ஒருவர், எழுதும் எழுத்துக்களை கணக்கிடும் வகையில் பேனா ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை சேர்ந்த முஸாஃபர் அகமது கான் என்ற மாணவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர், நாம் எழுதும்போது, எவ்வளவு எழுத்துக்கள் எழுதுகிறோம் என்பதை அறியும் வகையில் புதுமையான பேனா ஒன்றை வடிவமைத்துள்ளார்.
அதன்படி, அந்த பேனாவை கொண்டு எழுதப்படும் எழுத்துக்கள், அதனுடன் இணைக்கப்பட்ட எல்சிடி திரையில் கணக்கிட்டு காட்டப்படும்.இது குறித்து தெரிவித்துள்ள மாணவர் முஸாஃபர் அகமது கான், பள்ளி தேர்வுகளில் அதிக பக்கங்கள் எழுதுவது எப்படி என்பது குறித்து யோசித்த போது, இந்த கண்டுபிடிப்பு தோன்றியதாக கூறினார்.
இதனையடுத்து, ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கான நிகழ்ச்சி ஒன்றில், மாணவரின் எழுத்துகளை கணக்கிடும் பேனா சமர்ப்பிக்கப்பட்டு பாராட்டுகளை பெற்றது.குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மாணவர் முஸாஃபர் அகமது கானுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இந்த பேனா அடுத்த மாதம் முதல் கடைகளில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.