கம்போடியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் மனைவியை கொன்று பின்னர் தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.கம்போடியாவை சேர்ந்த 21 வயதான ரா சாய் ராத் தனது முன்னாள் மனைவியை பள்ளியில் வைத்து கொலை செய்து விட்டு பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஒரு உயரமான பாலத்திற்கு சென்ற ராத் அங்கிருந்து குதித்து தனது உயிரை மாய்த்து கொள்கிறார். ரத்தத்தை உரைய வைக்கும் இந்த தற்கொலை வீடியோ காட்சியை ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார் .
இக் காட்சியை கம்போடியாவில் 1 கோடியே 58 லட்சம் பேர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடாத்தி வருகிறார்கள்.குறித்த வீடியோவை ‘பேஸ்புக்’ சிறிது நேரத்தில் நீக்கி விட்டது.இச் சம்பவம் குறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்;தற்போது நடந்துள்ள இந்த கொடூர சம்பவத்துக்கு வருந்துகிறோம். இது போன்ற வன்முறை அல்லது தற்கொலையை பேஸ்புக் எப்போதும் அனுமதிக்காது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.