முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தகுதியானவர் என எவராவது கூறுவார்கள் என்றால், அவர்களை சாட்டையால் அடிக்க வேண்டும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச யுத்தத்திற்கு பயந்து நாட்டில் இருந்து தப்பிச் சென்று 15 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபர் எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் முன்னெடுப்புகளை பார்த்தால், பசில் ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிடுவதை விட, வெலிகடை சிறைச்சாலையின் அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிடுவது நல்லது என எனக்கு தோன்றுகிறது எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
களனி பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.