முல்லைத்தீவில் திடீரென காடுகள் பற்றி எரிந்தமையால் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, கேப்பாபுலவு காட்டுப் பகுதியில் சுமார் 40 ஏக்கர் பகுதி தீயினால் முற்றாக அழிவடைந்துள்ளது.
இந்த அனர்த்தம் நேற்று மாலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீ திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டதா அல்லது இயற்கையாக ஏற்பட்டதா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தம் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை விடுதலைப் புலிகளின் கோட்டையாக முல்லைத்தீவு காடு காணப்படுகிறது.
அந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் சில குழுவினர் இன்னும் மறைந்திருக்கலாம் என இராணுவத்தினர் அச்சம் கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக கடந்த காலங்களில் முல்லைத்தீவு காட்டினை அழிக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.