-
மேஷம்
மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தினருடன் வெளியில் சென்றுவருவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலி தமாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: பிற்பகல் 2.38 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக் கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.
-
கடகம்
கடகம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். பிற்பகல் 2.38 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறப்பான நாள்.
-
கன்னி
கன்னி: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தா சையாக இருப்பார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய த்துவம் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.
-
துலாம்
துலாம்: உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்வீர் கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். சாதித்துக் காட்டும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: பிற்பகல் 2.38 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். மாலைப் பொழுதி லிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.
-
தனுசு
தனுசு: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங் கள் வந்துப் போகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். பிற்பகல் 2.38 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
-
மகரம்
மகரம்: உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
-
கும்பம்
கும்பம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவே றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறி வீர்கள். அநாவசியச் செலவு களை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
-
மீனம்
மீனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.