அதிர்ச்சி கொடுத்த கலா மாஸ்டர்!

இந்திய திரை உலகின் நடனதாரகை என்றால் அனைவரது நினைவிற்கும் வருவது கலா மாஸ்டர்தான், இவரது நடனத்திற்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பதில் மறுப்பதற்கிடமில்லை.

இந்நிலையில், தற்போது கலா மாஸ்டர் தொடர்பில் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது.

இவரது குண்டான உடல்வாகு அனைவரும் அறிந்ததுதான், எனினும் கடந்த சில மாதங்களாகவே கலா மாஸ்டர் உடல் இளைத்து ஒல்லியாக காணப்படுவதோடு, இந்த தோற்றம் பலருக்கு பார்க்க பரிதாபமாக இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,

ஓயாத பணி காரணமாக சரியான நேரத்தில் சாப்பிட முடியவில்லை. காலை உணவை மதியமும், மதிய உணவை மாலை 6 மணிக்கும், இரவு உணவை நள்ளிரவும் சாப்பிட்டு வந்தேன்.

இதுவே பல பிரச்சினைக்கு காரணம். நான் 12 வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டேன், இதனால் எனக்கு தைராய்டு, உடல் எடை அதிகரிப்பு என பல பிரச்சினைகள்.

முதுகு வலி, மூட்டு வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது, வழக்கமான பணிகளில் ஈடுபட முடியவில்லை, அதனால் டயட் இருக்க ஆரம்பித்தேன். அப்போது 78 கிலோ இருந்தேன்.

முதல் 4 வாரத்திற்கு திட உணவை தொட்டு கூட பார்க்கவில்லை. திரவ உணவை மட்டுமே சாப்பிட்டேன். யோகா, கடுமையான உடற்பயிற்சி செய்தேன். இதன் பலனாக தற்போது 59 கிலோவாக குறைந்து விட்டேன், இன்னும் குறைக்க போகின்றேன் என உறுதியளித்துள்ளார்.