யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்மைச் சுற்றுலா மையமாக விளங்கும் கசூரினா கடற்கரையில் இரவு ஏழு மணிவரை சுற்றுலாப் பயணிகள் தங்கி இருக்க முடியும். எனினும் இரவு 6 மணிவரை மட்டுமே கடலில் நீராட முடியும்.
இந்த நடைமுறை நேற்று முன்தினம் தொடக்கம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் க.பாலச்சந்திரன் தெரிவித்ததாவது:
காரைநகர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. அபிவிருத்தி சம்மந்தமான பல முன் மொழிவுகள் வைக்கப்பட்டன. உப தவிசாளரால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் கீழ் பிரதேச சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய நேற்று முன்தினம் தொடக்கம் இரவு 7 மணிவரை கசூரினா கடற்கரை சுற்றுலா மையத்துக்கு மக்களை அனுமதிப்பது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாத காலப்பகுதிக்குள் கசூரினா கடற்கரை சுற்றுலா மையம் மின்னொளிகள் பொருத்தப்பட்டு இரவு 10 மணிவரை சுற்றுலா பயணிகள் பாவனைக்கு விடப்படும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் – என்றார்.