இலங்கையில் நிலவும் கடும் உஷ்ணமான காலநிலை தொடர்பில் விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அதிகமான வெப்ப நிலை காணப்படுவதால், அநாவசியமாக வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்குமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக உஷ்ணமாக காலநிலையின் காரணமாக சிறுவர்களின் உடலில் வறட்சி நிலை ஏற்படாமல் பாதுகாக்குமாறு வைத்தியர் லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பம் காரணமாக வவுனியா பம்படுவ இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்ட 14 இராணுவத்தினர் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நாட்களிலும் மேலும் ஆபத்தான நிலைமைகள் ஏற்படக் கூடும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆபத்துக்களில் இருந்து தப்பிக் கொள்ள அதிக நீர் அருந்த வேண்டும் என வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.