ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை!

குருணாகல் – பல்லேகொட்டுவ பகுதியில் தந்தை ஒருவர் தனது 8 மாதக் குழந்தையுடன் ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்லேகொட்டுவ – வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த நபர் 2ஆவது மனைவியுடன் வாழ்ந்து வருவதாகவும், குடும்பத்தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் இருந்து மாத்தறை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்தே குறித்த தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.