நிர்மலா தேவி! ரகசியம் லீக்ஸ்….

பேராசிரியை நிர்மலா தேவியால் அவரது கணவர் சரவண பாண்டியன் அதிகமாக பாதிக்கப்பட்டு இரண்டு முறை விவாகரத்து கோரியுள்ளார்.

நிர்மலாதேவியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால், வேதனை அடைந்த சரவணபாண்டியன் அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். பின்னர் பேராசிரியை நிர்மலாதேவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சரவணபாண்டியன் மீண்டும் ஊருக்கு திரும்பினார்.

அதைத் தொடர்ந்து, கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து சண்டையும், சச்சரவுகளும் ஏற்பட்டு வந்துள்ளன.

மகள்களை கூட்டிக் கொண்டு எங்காவது தலைமறைவாகி விடுவேன் என்றும், தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் நிர்மலாதேவி பலமுறை கணவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

அதோடு, பேராசிரியை நிர்மலாதேவி கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சென்னையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டாக கணவர் சரவணபாண்டியனை அதிகமாக துன்புறுத்த தொடங்கியுள்ளார்.

பேராசிரியை நிர்மலாதேவியின் தொந்தரவு அதிகமானதால் சரவணபாண்டியன் விவாகரத்துக் கோரி அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு தான் தற்கொலை செய்துகொள்வதாக நிர்மலாதேவி பலமுறை மிரட்டல் விடுத்ததால் விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார்.

தற்போது, இந்த சம்பவத்தால் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் சரவண பாண்டியன் தனது மனைவியின் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

மற்றொரு ரகசியமும் தற்போது லீக் ஆகியுள்ளது. தான் இவ்வாறு சந்திக்கு இழுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் பத்திரிகையாளர் ஒருவர் என தனது வழக்கறிஞரிடம் நிர்மலா தேவி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பத்திரிகையாளருக்கு வேண்டப்பட்டவர்கள் அருப்புக்கோட்டையில் கல்லூரி ஒன்றை அமைக்க திட்டமிட்டிருந்தார்கள்.

இதற்கு, நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை தெரிந்துகொண்ட பத்திரிகையாளர், கோபமடைந்து கல்லூரியின் பெயரை கெடுக்க திட்டமிட்டிருந்தார். அப்போது தான் அவருக்கு நிர்மலா தேவி விவகாரம் சிக்கியதையடுத்து அதனை ஊதி பெரிதாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.