என்னையே ஏன் எப்போ பார்த்தாலும் திட்டுறீங்க ? தலைமை ஆசிரியை சுட்டுக்கொன்ற மாணவன்!

ஹரியனா மாநிலத்தில் பள்ளி தலைமை ஆசிரியை திட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்த மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள விவேகானந்தா பள்ளியில் ரித்து சாஹப்ரா என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் நரேன் என்ற மாணவனும் படித்து வந்துள்ளார்.

நரேன் சரிவர படிக்காததால் ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர் ஆனாலும் தொடர்ந்து படிப்பில் கவணம் செலுத்தாமல் நரேன் மெத்தனமாகவே இருந்துள்ளார்.

இதனால் ஆசிரியர்கள் நரேன் பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

தலைமை ஆசிரியரான ரித்து நரேனை அழைத்து ஏன் சரிவர படிப்பில் கவணம் செலுத்தவில்லை இதே போல் தொடர்ந்து இருந்தால் உன் பெற்றோரிடம் கூறிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதன் பின்னரும் நரேன் போக்கில் எந்த மாற்றம் இல்லாதல் ரித்து நரேனின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்துவர கட்டாயப்படுத்தியுள்ளார். தொடர்ந்து தலைமை ஆசிரியை கண்டித்து வந்ததால் அவர் மீது மாணவர் ஆத்திரம் அடைந்துள்ளார்.

எனவே ரித்துவை கொலை செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்த நரேன் தனது தந்தை உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியை வீட்டில் இருந்து ரகசியமாக பள்ளியில் இருந்து எடுத்து சென்றுள்ளார்.

நேராக தலைமை ஆசிரியை அறைக்கு சென்ற நரேன், என்னை மட்டும் ஏன் எப்போதும் திட்டுகிறீர்கள் ? நான் மட்டும் தான் இந்த பள்ளியில் சரியாக படிக்கவில்லையா ? மற்றவர்களை விட்டுவிட்டு என்னை மட்டும் ஏன் மிரட்டுகிறீர்கள் என்று கத்தியவாறே தலைமை ஆசிரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அதன் பின் அங்கிருந்து அந்த மாணவர் தப்பி ஓடிவிட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டதால், அங்கிருந்த சக ஆசிரியர்கள் உடனடியாக ஓடி வந்து பார்த்த போது தலைமை ஆசிரியை ரத்த வெள்ளத்தில் சரிந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது சிகிச்சை பலன் இல்லாமல் தலைமை ஆசிரியை உயிரிழந்துள்ளார். அவரது உடலில் 4 குண்டுகள் பாய்ந்து இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் தலைமறைவாக இருந்த மாணவரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.