குழந்தை பிறந்ததும் ஏன் ஒரு பெண் பருமனாகிறாள் என கேள்விகளை நாம் கேட்பதில்லை. மாறாக அவளை கிண்டல் செய்வது வழக்கம்.
முதலில் ஒன்றை தெரிந்து கொள்லுங்கள். உடல் பருமனாவதற்கு அவர்கள் சொம்பேறித்தனம் என்று எளிதில் பழி போடாதீர்கள். பெண் தாயானதுமே ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு அது விரைவில் இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
சிலருக்கு ஹார்மோன் சம நிலையில்லாமல் உடல் பருமன், தைராய்டு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கிவிடும்.
இன்னும் சிலருக்கு தசைகளில் அதீத வளர்ச்சி உண்டாகி இடுப்பு பகுதிகளில் சதை போட்டுவிடும். இன்னும் சிலரே சரியாக உடற்ப்யிற்சி இல்லாமல் சோம்பேறித்தனத்தால் உடல் பருமனாகிவிடுகிறார்கள்.
உடல் பருமனை குறைக்க குழந்தை பிறந்ததும் பெண்கள் உடல் எடையை குறைக்க முயற்சித்தால் பின் வரும் நாட்களில் உடல் பருமனால் வரும் சர்க்கரை வியாதி, இதய நோய்களை தடுக்கலாம்…
உங்களுக்கு உதவும் வகையில் வாழைத்தண்டைக் கொண்டு எப்படி உங்கள் உடல் எடையை குறைக்கச் செய்யலாம் என இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழைத்தண்டின் நன்மைகள்
கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும்.
வாழைத்தண்டு ஜூஸ் தயாரிக்கும் முறை
- வாழைத்தண்டு
- மிளகு
- சீரகம்
- பூண்டு
- எலுமிச்சை சாறு
- சிறிது உப்பு
செய்முறை
வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். உடல் பருமன் நாளுக்கு நாள் குறைந்துவரும்.
வாழைத்தண்டு மோர்
- வாழைத்தண்டு
- மோர்
- இஞ்சி சாறு
- பெருங்காயத் தூள்
செய்முறை
வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும்.
மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ்போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும்.
இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும். இஞ்சிச்சாறு, உப்பு பெருங்காயத்தூள்சேர்க்கவும்.
தொடர்ந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் வயிற்று உப்புசம், வயிற்று கோளாறு நீங்கும். சிறு நீரக கற்கள் கரையும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்.