விசுவாசம் படத்தின் பிரபல நடிகருக்கு நடந்த சம்பவம்!

அஜித் சினிமா வாழ்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் பல உள்ளங்களை சம்பாதித்திருக்கிறார். அவரின் எளிமையான பண்பும், பழக்க வழக்கமும் எல்லோரையும் ஈர்த்துவிட்டது.

அவர் தற்போது நடிக்கவுள்ள விசுவாசம் படம் மே முதல் வாரம் முதல் ஷூட்டிங் தொடங்கப்படவுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, போஸ் வெங்கட் என பலர் நடிக்கவுள்ளார்கள்.

இப்படத்தின் இயக்குனர் சிவாவுக்கும் போஸ் வெங்கட்க்கும் நீண்ட நாளாக நல்ல நட்பு இருக்கிறதாம். அண்மையில் அவர் நேர்காணலில் கலந்துகொண்டார். சீரியல்களில் நடித்து வந்த எனக்கு விஜய் சேதுபதியுடன் நடத்த கவண் நல்ல இடத்தை பெற்றுத்தந்தது. படத்தை பார்க்க நானும் என் மனைவியும் சென்றோம்.

அப்போது முதல் காட்சி முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் பலரும் வாழ்த்தினார்கள். ஆனால் இதே தியேட்டருக்கு பல முறை படம் பார்க்க வந்திருக்கிறோம். ஆனால் இதுபோல எப்போதும் நடந்ததில்லை.

என் மனைவி, மாமா நீங்கள் ஏதோ இந்த படத்தில் செய்திருக்கிறீர்கள் என என்னை கட்டிபிடித்து அழுதுவிட்டாள் என கூறினார். அவரின் மனைவி பிரபல சீரியல் நடிகை சோனியா என்பது குறிப்பிடத்தக்கது.