தற்போதைய டென்சன் நிறைந்த வாழ்க்கை முறையினால், அடிக்கடி தலைவலியால் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் ஒற்றைத் தலைவலி ஒருவருக்கு வந்தால், அதிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட முடியாது. ஒற்றைத் தலைவலி முற்றிய நிலையில், குமட்டல், தலைச்சுற்றல் போன்றவையும் ஏற்படும்.ஒற்றை தலைவலி வந்து, அது 4-7 மணிநேரத்திற்கும் நீடித்திருந்தால், அதிலிருந்து விடுபட மருந்து மாத்திரைகளை எடுப்போம். ஆனால், ஒற்றை தலைவலியை எளிய இயற்கை வைத்தியத்தின் மூலமே சரிசெய்யலாம். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
காபி
எலுமிச்சை
காபி:
காபியில் வாசோகான்ஸ்டிரிக்டிவ் பண்புகள் மற்றும் காப்ஃபைன் உள்ளது. இந்த காப்ஃபைன் லாஸோடைலேஷன் மூலம் ஒற்றைத்தலைவலியை எதிர்த்துப் போராடும். மேலும் காபி பித்தப்பையை நன்றாக விரிவடையச் செய்து, பித்தப்பையில் கற்கள் உருவாவதைத் தடுக்கும் மற்றும் மலச்சிக்கலைக் குறைக்கும்.
எலுமிச்சை:
எலுமிச்சையில் உள்ள பண்புகள், காபியுடன் சேரும் போது, ஒற்றைத் தலைவலிக்கு காரணமான காரணிகளைத் தடுத்து, உடனடி நிவாரணம் அளிக்கும்.செய்முறை:
முதலில் நீரில் காபி தூளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினைக் கலந்து, குடிக்க வேண்டும்.