பிள்ளைகளின் கண்முன்னே கணவரால் தீயிட்டு கொழுத்தப்பட்ட குடும்பப்பெண் ஒருவர் 8 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
விசுவமடு தொட்டியடியை சேர் ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவகுமார் சிவமலர் (வயது 41) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.
குறித்த பெண் கமம் மற்றும் தையல் தொழிலை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகிறார். கணவரும் கமத்தொழில் மேற்கொண்டு வருகிறார். 20,16 மற்றும் இரண்டரை வயதில் பிள் ளைகள் உள்ளனர்.
இவரது கணவன் கடந்த 13ஆம் திகதி இரவு 7 மணிக்கு மது போதையில் வந்துள்ளார். அப்போது குறித்த பெண் ஆடை தைத்துக்கொண்டிருந்துள்ளார்.
பெண்ணின் கணவர் குறித்த பெண்ணை சரமாரியாக தாக்கி யுள்ளார். அப்போது அப் பெண் வீட்டின் பின் னால் ஒழிந்துகொண்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற கணவன் தன்னை தானே மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக் கப்போவதாக கூறி மிரட்டியுள்ளார்.
கணவனின் மிரட்டலுக்கு பயந்த குறித்த பெண் உடனடியாக வீட்டினுள் வந்து மீண்டும் தனது வேலையை தொடர்ந்துள்ளார்.
பின்னர் நித்திரையில் இருந்த கணவர் 9 மணிக்கு திடீரென எழுந்து மனைவி இரு ந்த அறைக்குள் சென்று கதவை உள்ளால் பூட்டியதுடன், மண்ணெண்ணையை எடுத்து சென்று மனைவியின் பின் பக்கமாக ஊற்றியுள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத மனைவி கூக் குரல் இட்டு கத்தியுள்ளார். உடனடியாக அவ் விடத்திற்கு வந்த பிள்ளைகள் அறைக் கதவை திறக்குமாறு தந்தையிடம் கோரியவாறு தாயை தீயிட்டு கொழுத்த வேண்டாம் என கதறியுள்ளனர்.
ஆனால் தனது பிள்ளைகள் முன்னால் தனது மனைவியை தீயிட்டு கொழு த்தியுள்ளார். தீயில் எரிந்து துடித்த பெண்ணை அயல வர்களின் உதவியுடன் மீட்ட பிள்ளைகள் உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் கடந்த 19ஆம் திகதி கிளநொச்சி வைத்தியசாலைக்கு அனு ப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் மேல திக சிகிச்சைக்காக 20ஆம் திகதி யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அடுத்த நாள் 21ஆம் திகதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் கணவர் பொலிஸா ரால் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசா ரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.