எதிர்வரும் மே தினம் தொடர்பில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடவுள்ளனர்.
கட்சி தலைவர்களுக்கான குறித்த ஒன்றுகூடல், கொழும்பு – விஜயராம பகுதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாளை மாலை இடம்பெறவுள்ளது.
குறித்த ஒன்றுகூடலின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலமைகள் மற்றும் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.