SAKE எனப்படுகின்ற அதியுயர் செறிவு கூடிய ( 15 % அல்ககோல் ) மதுபானம் சட்டவிரோதமான முறையில் யாழில் விற்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
இதனை பியர் என்றே நினைத்து பெரும்பாலானவர்கள் அருந்துகின்றனர் . ஆனால் இது பியர் அல்ல . இதனை அருந்துவதானால் கொஞ்சமாகவே அருந்தமுடியும் .
ஒரேயடியாக முழுவதையும் அருந்தினால் ஒருவருடைய மனதை அப்படியே முழுமையாக மாற்றக்கூடியது .
இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று போத்தல்களை அருந்திய 32 வயது நிரம்பிய இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணித்த சம்பவம் கடந்த வருடம் இடம்பெற்றுள்ளது , அதன்பின்னர் குறித்த மதுபான விற்பனை நிலையத்தினையும் , உரிமையாளரையும் பொதுமக்கள் கொடூரமாக தாக்கிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது .
அதன் பின்னர் தென்னிலங்கையில் இந்த மதுபானம் உத்தியோகபூர்வ மற்றதாக தடைசெய்யப்பட்ட நிலை காணப்படுகின்றது .
அங்கு எந்தப்பகுதியிலும் காணமுடியாது இந்த மதுபானத்தினை. களுத்துறை மாவட்டத்தின் பாதுக்க பகுதியிலே ஓர் அரசியல்வாதியொருவரின் முதலீட்டிலேயே மேற்குறித்த மதுபான வகை தயாரிக்கப்படுகின்றது . ஆனால் களுத்துறையில் இது விற்பனை செய்யப்படுவதில்லை.
தமிழர் பிரதேசங்களை சீரழிக்கும் நோக்குடன் குறிப்பிட்ட சில இனவாத அரசியல்வாதிகளின் முழுமையான ஆதரவோடு தற்போது வடமாகாணத்தில் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. பச்சை என்று அடைமொழியோடு அழைக்கப்படுகின்ற இந்த மதுபானம்.
அண்மைக்காலங்களில் புங்குடுதீவில் இடம்பெற்றுள்ள 15 க்கு மேற்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு மேற்படி மதுபானமே பிரதான காரணமென்பதனை பொலிசாரே ஏற்றுக்கொள்கின்றனர் .
சிலதினங்களுக்கு இதனை அருந்திய ரீன் ஏஜ் வயது இளைஞர்கள் சிலர் கொலைமுயற்சியில் ஈடுபட்டு தற்போது சிறையிலுள்ளனர் .
மேலும் குடும்பஸ்தரொருவர் சிறிய குடும்ப தகராறுக்காகவே மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்ய முற்பட்டு அடுத்த நாள் காலையில் தான் செய்யவிருந்த முட்டாள் தனத்தினை எண்ணி கவலை கொண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது .
சுவையற்றதாக விருந்தபோதும் குறைந்த விலையில் (330 ரூபா) அதிக போதையினை இது வழங்குவதால் பலரும் பச்சைக்கு அடிமையாகியுள்ளனர்.
மேற்படி கொம்பனியால் தயாரிக்கப்படுகின்ற ( மினரல் வோட்டர் ) தண்ணீர் போத்தல்களையே மேற்படி மதுபான நிலைய முகாமையாளர் யாழ்மாவட்டத்தின் பலபகுதிகளிலும் விநியோக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய விசாரணை நடைபெற்றது .
மேற்படி மதுபான விற்பனையை தம்மால் தடைசெய்யவதற்கு அதிகாரமில்லையெனினும் பொதுமக்களின் நன்மைகளுக்காக தயவுசெய்து விற்க வேண்டாமென்று மதுபான விற்பனை நிலையத்தினரை தாழ்மையோடு கேட்டிருந்தார்.
தொடர்ந்தும் விற்பனை செய்வீர்களாயின் நீங்கள் பொதுமக்களின் கோபங்களுக்கு உள்ளாக நேரிடும் , வன்முறைகள் ஏற்படலாமென்றும் அறிவுறுத்தியிருந்தார்.
விற்கமாட்டாமென்று கூறிய விற்பனையாளர்கள் சிலநாட்களிலேயே மீண்டும் விற்க ஆரம்பித்துள்ளனர்.
மேலும் இந்த நிலையத்தில் தரமான மதுபானப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லையென்தையும் பொறுப்பதிகாரிக்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. குறிப்பாக சாதாரணமாக நாட்டின் பெரும்பாலான மது விற்பனை நிலையங்களில் காணப்படக்கூடிய DCL வகை சாராயங்களோ இல்லாமல் தரம்குறைந்த ரந்தெனிகல சாராயம் , அங்கர், சம்பியன், சுப்பர் ஸ்ரோங் போன்ற மதுபானங்களே இங்கு விற்னை செய்யப்படுகின்றன .
அதிகளவான கழிவு விலையில் பெற்றுக்கொள்ளமுடிவதாலேயே இவ்வாறான மதுபானங்களை நிர்வாகத்தினர் தொடர்ச்சியாக விற்பனை செய்கின்றனர்.