பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அருகிலிருந்து கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸ பரிசுகளை பரிமாறிக்கொள்ளும் புகைப்படங்களை பத்திரிகைகள் இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.
மருதானை, சுதுவெல்ல பகுதியில் நடைபெற்ற புதுவருட நிகழ்வொன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டுள்ளார்.
குறித்த நிகவை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸ இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார் என தெரியவந்துள்ளது.
அத்துடன், பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
இதேவேளை, கடந்த 4 ஆம் திகதி இரவு, பிரதமர் கொழும்பு, கங்காராம விகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் கித்சிறி ராஜபக்ஸ பிரதமருக்கு அருகில் இருந்தார்.
இதனை தொடர்ந்து அடுத்த தினத்தில், பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்து முகமாக கொழும்பு நகரெங்கும், கித்சிறி ராஜபக்ஸ சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்.
மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸ பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் ஒருமுறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அருகிலிருந்து கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸ உள்ள புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெயிவந்துள்ளமை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.