வேலூர் கோட்டையில், மாணவிகள் மது அருந்தி ஆட்டம் போட்டு கும்மாளமிடும் வீடியோ, வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருவது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ காட்சியில், கோட்டை மதில் மீது கல்லூரி மாணவிகள் 4 பேர் நடனமாடுகின்றனர்.
அவர்களில் ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை டி-சர்ட் அணிந்த ஒரு மாணவி, கையில் பீர் பாட்டில் வைத்திருக்கிறார். அவர், ‘ஓவென’ சத்தம் போட்டு பீர் பாட்டில் மூடியை பற்களால் கடித்து திறக்கிறார்.
பிறகு, பாட்டிலை வாயில் வைத்து பீரை மடக்மடக்கென குடிக்கிறார். 2 மடக்கு பீரை குடிக்கும் அந்த மாணவி, செல்போனில் வீடியோ எடுக்கும் தனது சக தோழியை பார்த்து, ‘எதுக்குடி வீடியோ எடுக்குற? என்று கேட்கிறார். அதற்கு வீடியோ எடுத்த மாணவி, ‘சும்மா தான் எடுக்கிறேன்’ என்கிறார்.
அதற்கு ‘அடியே, அதை யாருக்காவது அனுப்பிட போற ஜாக்கிரதை’ என்று பீர் குடித்த மாணவி கூறுகிறார்.
‘யாருக்கும் அனுப்ப மாட்டேன்’ என்று கூறும் வீடியோ எடுத்த மாணவி, தொடர்ந்து, வீடியோ எடுப்பதிலேயே முனைப்பு காட்டுகிறார்.
அவருக்கு மற்ற 3 மாணவிகளும் பீர் பாட்டிலை ஒரு சேர பிடித்தும், பாட்டிலை மாறி, மாறி வாங்கி பீர் குடித்தும் வீடியோவுக்கு வித விதமாக ‘போஸ்’ கொடுக்கின்றனர்.
ஒரு வழியாக பீரை குடித்து காலி செய்யும் மாணவிகள், போதையில் கும்மாளமிடுகின்றனர்.
அப்போது, கோட்டையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள், பீர் பாட்டிலுடன் போதையில் ஆட்டம் போட்ட மாணவிகளை பார்த்து முகம் சுளித்தனர்.
இந்த காட்சிகள் அனைத்தையும் அவர்கள் தைரியாக செல்போனில் பதிவு செய்தது தான் வேடிக்கை.
தற்போது, இந்த வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.