மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!

தங்காலை பிரதேசத்திலுள்ள தெற்கு குடவெல பிரதேசத்தில் கணவரொருவர் தனது மனைவியை வெட்டிக் கொலைசெய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

22 வயதான  மனைவியை  26 வயதான கணவர் தர்ஷன் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.

தொலைபேசி அழைப்பின் நிமித்தம்  தங்காலை பெண் பொலிஸார் குறித்த பெண்ணின் வீடுக்கு சென்றபோது  குறித்த பெண்ணி வெண்நிற ஆடை இரத்த கரைபடிந்த நிலையில் சிவப்பு நிற ஆடையாக தென்பட்டநிலையில் குறித்த பெண் கழுத்து வெட்டப்பட்ட   நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைரேகை அதிகாரிகள் மற்றும் குற்றம் பிரிவு அதிகாரிகள் உடனடியாக  அப்பகுதிக்கு சென்று  விவாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக உறவினர் ஒருவர் தெரிவித்ததாவது கணவர்  வீட்டிற்கு விஜயம் செய்து சில மணி நேரங்களுக்கு பின்னர் நடதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.