தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கிய 15 வயது மாணவன் மீட்கப்பட்டு கோப்பாய் மருத்துவமனையில் சேர்த்தபோதும் மாணவன் உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் நீர்வேலியில் நடந்துள்ளது. நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த பிராபாரகரன் துபாரகரன் (வயது-15) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
துபாரகரனின் பெற்றோர் கொழும்பில் வசித்து வருகின்றனர். துபாரகரன் தனது பேத்தியுடன் நீர்வேலியில் வாழ்கிறார். நீர்வேலி சோமஸ்கந்தா பாடசாலையில் அவன் ஜி.சி.ஈ சாதாரண தரத்தில் கல்வி கற்கிறார். துடிப்பும், விளையாட்டில் அதிக ஆர்வமும் கொண்டவர்.நேற்றுமுன்தினம் துவாரகனின் தாய் அவனுடன் தொடர்பு கொண்டுள்ளார். துபாரகரனை சாதாரண தரப் பரீட்சைக்குத் தயார்ப்படுத்த வேண்டும் என்றும் தான் யாழ்ப்பாணம் வருவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையிலேயே துபாரகரன் தவறான முடிவெடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டது.இறப்புத் தொடர்பாக விசாரணையை யாழ்ப்பாணம் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார் .