விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணம்!

யாழ். நெல்லியடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஐந்து நாட்களின் பின்னர்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ். நெல்லியடிச் சந்திக்கு அருகாமையில் கடந்த வியாழக்கிழமை(19) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் படுகாயமடைந்தார்.

கரவெட்டியிலிருந்து வெற்றிலை வாங்குவதற்காக நெல்லியடிச் சந்திக்குச் சென்ற போது எதிர்பாராத விதமாகத் திடீரென மோட்டார்ச்சைக்கிள் லொக்காகி அதில் பயணித்த மேற்படி இளைஞன் நிலத்தில் விழுந்துள்ளார்.அப்போது பின்னால் வந்த மோட்டார்ச் சைக்கிள் மோதியதில் குறித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

மேலும், இரு இளைஞர்கள் சம்பவத்தில் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தலையில் படுகாயங்களுள்ளான மேற்படி இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று  இரவு உயிரிழந்துள்ளார்.

யாழ். கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த திருவம்பலம் கவிராஜ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவர். குறித்த இளைஞரின் உயிரிழப்பால் கரவெட்டிக் கிராமத்தையே சோகத்தில் ஆழத்தியுள்ளது.