போலியான ஆவணங்களை சமர்ப்பித்து சிங்கப்பூர் நோக்கி பயணிக்க முயற்சித்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் -பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் பயணப்பொதியை சோதனையிட்ட போது , அதில் சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்துக்கு பயணம் செய்யும் விமானப் பயணச்சீட்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் , மேலும் சில போலியான ஆவணங்களும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சந்தேகநபர் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.