அம்பலங்கொடையில் சமூக சீர்கேடுகளில் ஈடுபட்ட 11 பேரும் மிட்டியாகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்லங்கொடை – கொடகம நிகழ்வு மண்டபத்தினுள் இடம்பெற்ற பேஸ்புக் நண்பர்கள் விருந்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த விருந்தில் கஞ்சா, அபின், ஹசீஸ், மற்றும் போதை மாத்திரைகளுடனே குறித்த 11 பேரும் மிட்டியாகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பலபிட்டிய நீதவானிடம் பெற்றுகொண்ட ஆணைக்கு அமைய திடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 200 – 250 பேர் அங்கிருந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர்களிடையே இருந்த 11 பேரிடம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த விருந்தில் பங்கேற்க 3000 ரூபாய் செலுத்தி பற்றுச் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். பற்றுச் சீட்டு பெற்று கொள்ளாதவர்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. சுற்றிவளைப்பின் போது அதிகளவு இளம் பெண்களும் இருந்துள்ளனர்.
50 பொலிஸ் அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை இலங்கையின் பல பாகங்களில் இவ்வாறான பேஸ்புக் நண்பர்களின் விருந்துகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறான விருந்துகளில் ஆண்களை விட பெண்களே அதிகம் பங்கேற்று வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டிள்ளனர்.
இது குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.