ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!! பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு!!

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அமிந்த மெத்சீல குறிப்பிட்டுள்ளார்.கொழும்பு ஊடகமொன்றிட்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கும் போது;அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், குறித்த நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொண்டுள்ள கடன் டொலருக்கு மாற்றப்பட்டு செலுத்தப்படுவதால், கடந்த காலங்களை விட அதிக தொகையை செலுத்த வேண்டிய சந்தர்ப்பமும் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிரிமல் அபேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன், இது எரிபொருள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் என்பவற்றின் விலை அதிகரிப்பில், நேரடியாக தாக்கம் செலுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.