கேரட்டின் சிறப்புகளாக பல விஷயங்களை பார்த்திருப்பீர்கள், கண்களின் சிறப்புகளில் இருந்து அழகுக் குறிப்புகள் வரை கேரட்டின் பயன்கள் எண்ணிலடங்காதவை.
என்றாலும் கேரட் நம் உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கேரட்டுக்கு புண்களை ஆற்றும் வல்லமை உண்டு, தோலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு எளிய பூசு மருந்தாக கேரட் செயல்படுகிறது.
கேரட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் இதனை காயங்களில் தடவும்போது விரைவில் குணமாகி விடுகிறது.
மேலும் அடிபட்டதால் ஏற்படும் வீக்கம் போன்றவைகளையும் கரைக்கிறது.
கேரட் களிம்பு தயாரிக்கும் முறை
கேரட்
தேங்காய் எண்ணெய்
கேரட்டை துருவி மசித்து பசை போல் ஆக்கிக் கொள்ளவும், இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலம் போல காய்ச்சிக் கொள்ளவும்.
ஆறியவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து காயம்பட்ட இடத்தில் தடவி வரவும், காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் வெகு விரைவில் குணமாகும்.