தமிழகத்தில் மன வளர்ச்சி குன்றிய மகளை துஷ்பிரயோகம் செய்து தாயாக்கிய தந்தைக்கு நான்கு ஆயுள் தண்டை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் சிவக் கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன்(50). பெயிண்டராக இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 17 வயதில் மன வளர்ச்சி குன்றிய மகளும் இருந்துள்ளார்.
இந்நிலையில் ரேவதி ஒரு முறை மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றிருந்த போது, சுப்ரமணியன் மகள் என்று கூட பாராமல் அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இது குறித்து, தாயிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் மிரட்டி உள்ளார். அன்றோடு மட்டுமின்றி ரேவதி வீட்டில் இல்லாத நேரத்திலும், பள்ளி விடுமுறை நாட்களிலும், சுப்ரமணியன் தொடர்ந்து, மகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த ரேவதி, அவர் குறித்து பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததுடன், அதைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதற்கு எல்லாம் காரணம் சுப்ரமனியன் தான் என்பதை அறிந்த ரேவதி அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்நிலையத்தில் தன் கணவன் மீது புகார் அளித்துள்ளார்.
அதன் பின் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து வழக்கு நடந்து வந்த வேளையில், நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
அப்போது, மகள் என்றும் பாராமல், பாலியல் பலாத்காரம் செய்ததற்கு, நான்கு ஆயுள் தண்டனையும், கொலை மிரட்டலுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், சுப்ரமணியன் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.