இலங்கையின் புதிய வரைப்படம் மே மாதம் இறுதிக்கு முன்னர் வெளியிடப்படவுள்ளதாக நில அளவையாளர் பீ.எம்.பீ.உதயகண்ணா தெரிவித்துள்ளார்.கொழும்பு நகரத்தில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்களுடனான முழுமையான வரைப்படமே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.கொழும்பு துறைமுக நகரம் உட்பட கொழும்பு மாவட்டத்தில் இடம்பெறும் புதிய 66 மாற்றங்களுடன் இந்த வரைப்படம் வெளியிடப்படவுள்ளது.இதுவரை காணப்பட்ட வடிவத்திலும் அளவிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இலங்கையில் கடந்த காலங்களாக ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள் இதில் உள்ளடக்கப்படவுள்ளன.
92 வரைபட பிரிவுகளுடான முழுமையான வரைப்படத்தை அடுத்த மாத இறுதிக்கு முன்னர் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதென நில அளவையாளர் பீ.எம்.பீ.உதயகண்ணா மேலும் தெரிவித்துள்ளார்.