நடுக்கடலில் மூட்டை மூட்டையாக பீடி இலைகள்!!

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் சென்ற சுமார் 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் ரக பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கடலில் கரை ஒதுங்கியுள்ளதாக சுங்கத்துரையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த பீடி இலை மூட்டைகளை இன்று காலை சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர்.மன்னார் வளைகுடா கடல் பகுதியான பாம்பன் குந்துகால் கடல்பகுதியல் இன்று அதிகாலை மூட்டை மூட்டைகளாக நடுக்கடலிலும் கடற்கரை ஓரத்திலும் பெறுமதியான உயர் தரம் வாய்ந்த பீடி இலை மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மீனவர்கள தகவல் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சுங்கத்துறையினர் மீனவர்கள் உதவியுடன் கரை ஒதுங்கிய பெறுமதி வாய்ந்த சுமார் 25 மூட்டை உயர் ரக பீடி இலைகளை மீட்டுள்ளனர்.நடுக்கடலில் மிதந்து வரும் மூட்டைகளை பொலிஸார் மீனவர்களின் உதவியுடன் மீட்டுள்ளதாக கூறப்படுகின்றது.மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் சென்ற சுமார் 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் ரக பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கடலில் கரை ஒதுங்கியுள்ளதாக சுங்கத்துரையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பீடி இலை மூட்டைகளை இன்று காலை சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர்.மன்னார் வளைகுடா கடல் பகுதியான பாம்பன் குந்துகால் கடல்பகுதியல் இன்று அதிகாலை மூட்டை மூட்டைகளாக நடுக்கடலிலும் கடற்கரை ஓரத்திலும் பெறுமதியான உயர் தரம் வாய்ந்த பீடி இலை மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மீனவர்கள தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சுங்கத்துறையினர் மீனவர்கள் உதவியுடன் கரை ஒதுங்கிய பெறுமதி வாய்ந்த சுமார் 25 மூட்டை உயர் ரக பீடி இலைகளை மீட்டுள்ளனர்.நடுக்கடலில் மிதந்து வரும் மூட்டைகளை பொலிஸார் மீனவர்களின் உதவியுடன் மீட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மீட்கப்பட்ட பீடி இலை மூட்டைகள் உயர் ரகத்தை சேர்ந்தது எனவும் இதன் மதிப்பு சுமார் 50 இலட்சம் எனவும் தெரிய வந்துள்ளது.இதேவேளை, இலங்கைக்கு கடத்திச் செல்லும் போது, நடுக்கடலில் படகு மூழ்கியதால் மூட்டைகள் தவறி கடலில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.