பஸ்- மோட்டார் சைக்கிள் கோர விபத்து!! இருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் மன்னார் வீதி விடத்தல் தீவுப் பகுதியில் நடைபெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று நண்பகல் நடைபெற்ற இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற இ.போ.ச பேருந்து விடத்தல் தீவினை அண்மித்த பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறுக்கு வீதியூடாக பிரதான வீதிக்கு வந்த மோட்டார் சைக்கில் ஒன்றுடன் மோதியுள்ளது.குறித்த மோட்டார் சைக்கில் பிரதான வீதிக்கு குறுக்கே திடீரென வந்த காரணத்தினால் இ.போ.ச பேருந்தின் சாரதி பேருந்தை வீதியோரமாக செலுத்தியுள்ளார்.இருப்பினும், பேருந்தை நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கில் பேருந்துடன் மோதியுள்ளது.இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிலில் வந்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.