சர்வதேச சந்தைகளில் நிலவிய பலவீனமான மனநிலையினாலும், டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து இறங்கி வருவதாலும், இந்திய பங்குச் சந்தை இன்று வர்த்தக நேரம் முழுதுமே தொய்வுடன் இருந்தது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 115.37 புள்ளிகள், அதாவது 0.33 சதவிகிதம் குறைந்து 34,501.27 என முடிந்தது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டடி 43.80 புள்ளிகள், அதாவது 0.41 சதவிகிதம் கீழிறங்கி 10,570.55-ல் முடிவுற்றது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்று அமெரிக்க பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தது. டவ் ஜோன்ஸ் குறியீடு மற்றும் நாஷ்டாக் தலா 1.7 சதவிகிதம் நஷ்டம் அடைந்தன. S&P 500 1.3 சதவிகித நஷ்டத்துடன் முடிவடைந்தது. அரசு கருவூல பத்திரங்கள் ஈட்டிய வருவாய் கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவு உயர்ந்தது பங்குச் சந்தையில் பங்குகள் விலை சரியாய் ஒரு முக்கிய காரணம்.
ஆசிய சந்தைகள் பெரும்பாலும் கீழிறங்கியதும் இன்று இந்திய பங்குச் சந்தையில் உற்சாகமான மனநிலை இல்லாததற்கு ஒரு காரணம்.
அந்நிய செலாவணி சந்தையில் இன்று டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு 66.81 என கிட்டத்தட்ட 14 மாதத்திய லோ -விற்கு சரிந்தது.
கச்சா எண்ணெய் தொடர்ந்து 2014 நவம்பர் மாதத்தின் உயரத்திலேயே இருந்து வருவதும், இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் மனநிலை தொய்வுடன் இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம் எனலாம்.
ரூபாயின் மதிப்பு டாலருக்கெதிராக குறைந்ததன் காரணமாக தகவல் தொழில் நுட்ப துறை பங்குகள் முன்னேற்றம் கண்டன.
எப்.எம்.சி.ஜி மற்றும் டெலிகாம் துறைகளில் ஓரளவு பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். சில ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் மற்றும் மருத்வத் துறை பங்குகள் சிறிதளவு உயர்ந்தன.
மெட்டல், கேப்பிடல் கூட்ஸ், ஆயில் மற்றும் வங்கி துறைகளின் பங்குகள் பெரும்பாலும் இறக்கத்திலேயே முடிந்தன.
இன்று மும்பை பங்குச்சந்தையில் 900 பங்குகள் மட்டுமே விலை உயர்ந்தும், 1749 பங்குகள் விலை குறைந்தும், 140 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.
இன்று விலை அதிகரித்த பங்குகள் :
பார்தி ஏர்டெல் 2.9%
டாடா கன்சல்டன்சி சர்விசஸ் 2.4%
மஹிந்திரா & மஹிந்திரா 1.75%
பவர் கிரிட் கார்பொரேஷன் 1.4%
ஐ.சி.ஐ.சி.ஐ. ப்ரூடென்டியால் லைஃப் 4.5%
எஸ்.பி.ஐ. லைஃப் 2.75%
அசோக் லேலண்ட் 3.3%
மரிக்கோ 2.7%
விலை குறைந்த பங்குகள் :
ஹின்டால்க்கோ 2.3%
வேதாந்தா 3%
கெயில் இந்தியா 3%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 2.8%
ஓ.என்.ஜி சி 1.7%
டாடா ஸ்டீல் 1.7%
பெட்ரோனெட் 4%
பேங்க் ஆஃப் பரோடா 3.8%
பி.எச்.ஈ.எல் 3.5%