வெசாக் வாரத்தை முன்னிட்டு மதுபான நிலையங்களுக்கு பூட்டு!! மீறினால் கடும் சட்டநடவடிக்கை!!

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு வாரத்துக்கு மதுபான சாலைகளை மூடுவதற்கு இலங்கை மது வரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மது வரித்திணைக்கள ஜெனரல் ஆர். சேமசிங்கவின் ஆலோசனையின் கீழ் இந்தச் செயற்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.மது வரித்திணைக்களத்தால் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,அபராதமும் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதம் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 3 ஆம் திகதி வரை
அனுமதிப்பத்திரம் அற்ற மது விற்பனை நிலையங்களை மூடுவதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக மது வரித்திணைக்களத்தின் சட்ட செயற்படுத்தல் பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழுவும்
நியமிக்கப்படவுள்ளன.

சட்ட விரோத மது பான விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக 011-2045077 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமும், 011-2877882 என்ற தொலைநகல் இலக்கத்தின் மூலமும் அறியத்தர முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.