சர்வதேச இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. 25வது தடவையாக இந்தப் போட்டி சமீபத்தில் சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேட் நகரில் நடைபெற்றது.
இலங்கையின் சார்பில் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த சமாஷி விஹங்க முனவீர, கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த சவந்தி சேனாநாயக்க, கொழும்பு நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த ரகிந்து விக்ரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இவர்கள் மூவரும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், சுவரொட்டிகள் ஆகிய பிரிவுகளில் போட்டியில் கலந்து கொண்டார்கள். சுவரொட்டிப் பிரிவில் மூவருக்கும் தங்கப்பதக்கம் கிடைத்தது.
இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் ரஷ்யா, ஜேர்மன், நெதர்லாந்து, இந்தியா, பிரான்ஸ், பிரேசில், இந்தோனேஷியா முதலான நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் 215 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.