முகத்தில் மருக்கள் இருப்பது பெரிய பிரச்சினையாகத்தான் இருக்கும். சின்னதாக இருப்பது பெரிதாக ஆரம்பிக்கும். குறைவாக இருப்பது நிறைய தெரிய ஆரம்பிக்கும்.
இது முகத்தை விகாரமாக்குவதோடு, பெரிய மன நோயையும் கொடுக்கும்.இதுகுறித்து இனிமேலும் கவலைப்படத் தேவையில்லை. கீழே தரப்பட்டுள்ள கை வைத்தியத்தைச் செய்து பார்த்தால், கட்டாயம் நல்ல பலன் தெரியும்.
எருக்கஞ்செடி இலையின் பாலை தோலின் மேல் படாமல் மருவின் மேல் மட்டும் படும்படி தடவணும்.
அம்மான் பச்சரிசி இலையின் தண்டுப்பாலை தோலின் மேல் படாமல் மருவின் மேல் மட்டும் படும்படி தடவணும்.
இரணக்கள்ளிச் சாற்றை தோலின் மேல் படாமல், மருவின் மேல் மட்டும் படும்படி இரவில் தடவி, மறுநாள் காலையில் வெந்நீர் விட்டு கழுவிவிடவேண்டும்.
துணிதுவைக்கும் சோப், சுண்ணாம்பு இவ்விரண்டையும் சம அளவு எடுத்து கடுகளவு சோடா உப்பைக் கலந்து குழைத்து தோலின்மேல் படாமல் மருவின் மேல் மட்டும் படும்படி தடவவேண்டும்.
சந்தனம், மிளகு, ஜாதிக்காய் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மைய அரைத்து தோலின் மேல் படாமல், மருவின் மேல் மட்டும் படும்படி தடவனும்.
கொட்டாங்குச்சியை நெருப்பில் வாட்டி அதிலிருந்து வரும் எண்ணெயைக் குழைத்து தடவணும்.மருவின் அடிப்பாகத்தில் தலைமுடி அல்லது குதிரைவால் முடிகொண்டு இறுக்கமாகக் கட்டணும்.
இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களை மைய அரைத்து இரவில் தூங்கச் செல்வதற்கு முன் மருவின்மீது வைத்து ‘ பேண்ட் எய்ட் ‘ பட்டையால், மூடி ஒட்டிவிடணும்.மேற்கூறப்பட்ட இயற்கை வைத்திய முறைகளை முறையாக செய்து வந்தால் ஒரிரு நாட்களிலேயே பலன் தெரியும்.