ஜப்பான் நாட்டு பேராசியர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்களை ஏமாற்றி மில்லியன் கணக்கில் பணம் மோசடி செய்த இலங்கையர்கள் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
பண்டாரவளை பிரதேசத்தில் நடத்தி செல்லப்படும் பாரிய தோடம்பழம் பயிர்செய்கை குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டு இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
அண்மையில் ஊவா மாகாண சபையை சேர்ந்த பிரதிநிதிகள் சிலர் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்த மோசடி தொடர்பில் தகவல் தெரியவந்துள்ளது.
ஊவா மாகாண சபையின் அமைச்சர் உறுப்பினர்கள், ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் அங்கு ஒரு நிறுவனத்தினால் இவர்களுக்காக விசேட மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஜப்பான் பேராசிரியர் ஒருவரினால் ஊவா மாகாணத்தில் தற்போதைய வளர்ச்சி தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேசத்தில் ஜப்பான் நிதி உதவிக்கமைய நடத்தி செல்லப்படும் 18 ஏக்கர் தோடம்பழம் தோட்டத்தின் புகைப்படத்தை காட்டியுள்ளனார்.
எனினும் அந்த விஜயத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் பிரதிநிதிகள் அல்லது அதிகாரிகள் ஒருவரும் அவ்வாறான திட்டம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை. இவ்வாறான திட்டம் ஒன்று பண்டாரவளையில் இல்லை என ஊவா மாகாண சபையின் சபை தலைவர் மேஜர் சுதர்ஷன தெனிப்பிட்டிய ஜப்பான் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இரண்டு வருடங்களாக தான் இந்த தோடம்பழம் திட்டத்திற்காக நிதி உதவி வழங்குகின்ற நிலையில் திட்டத்தை நடத்தி செல்பவர்களினால் இடைக்கிடையே வீடியோ மற்றும் புகைப்படங்கள் தன்னிடம் அனுப்புவதாகவும், அதன் வளர்ச்சியை அறிவிப்பதாகவும், ஜப்பான் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் போது ஊவா மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மாகாண விவசாய பணிப்பாளர், கமநல சேவைகள் திணைக்களம் உட்பட அனைத்து பிரிவுகளும் மேஜர் சுதர்ஷன தெனிபிட்டிய அழைப்பு ஏற்படுத்தி இந்த தோடம்பழ தோட்டம் குறித்து வினவியுள்ளார். எனினும் பதுளை மாவட்டத்திலேயே அவ்வாறான ஒன்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய அது மோசடியான முறையில் சிலரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என தெரியவந்துள்ளது. பல மில்லியன் பணம் வழங்கிய ஜப்பான அதிகாரி உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.