பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வுக்கு மணப்பெண் ஒருவர் சமூகமளித்துள்ளார். இந்தச் சம்பவம் மாத்தறையில் நடந்துள்ளது.
மாத்தறை மாவட்டம் கெட்டவலகமவில் வசிக்கும் பட்டதாரியான கே.ஆர். அமாலி ப்ரியதர்ஷன ஜயரத்ன என்பவர் மணப் பெண் கோலத்துடன், மணமுடித்த கணவருடன் நேர்முகத் தேர்வுக்குச் சமூகமளித்துள்ளார்.
மணமகனின் வீட்டிற்கு புதுத் தம்பதிகளை வரவேற்கும் வைபவத்திற்கு கலந்து கொள்ளும் நாளில் குறித்த பெண்ணுக்கு நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையிலேயே மணப்பெண் கோலத்துடன், நேர்முகத் தேர்வுக்குச் சென்றார் என்று கூறப்படுகிறது.