வடகொரியா மற்றும் தென் கொரியா இருநாடுகளுக்கிடையே நடைபெறவிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாட்டில் வடகொரியா ஜனாதிபதி கிம் தென் கொரியா ஜனாதிபதியின் கை பிடித்து கம்பீரமாக நடந்து வந்தார்.
கொரியப்போர் 1953-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர் வட, தென்கொரியாக்கள் இடையே இணக்கமான சூழல் கிடையாது. கொரியப்போர் முடிவுக்கு வந்தபோதும், இரு நாடுகள் இடையே பனிப்போர் பல்லாண்டு காலமாக நீடித்து வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், சில அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியது.
அணு ஆயுத சோதனைகள் மூலம் மிரட்டி வந்த வடகொரியா இறங்கி வந்து தென் கொரியாவுடன் பேச்சு வார்த்தைக்கு முன் வந்தது.
அதன் பின் இருநாடுகளின் உயர்மட்ட குழுவினர் சந்தித்து பேசினர். இதனால் இரு நாடுகளுக்கிடயேயான பகை விலகத் துவங்கியது.
இதையடுத்து இன்று வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும், தென் கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன்னும் உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இந்த மாநாடு இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வடகொரியா ஜனாதிபதி கிம் அங்கு புறப்பட்டு சென்றார்.
சரியாக உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணிக்கு இடத்தை அடைந்த கிம்மை, சிவப்பு கம்பளம் மற்று இராணுவ மரியாதையுடன் தென் கொரியா ஜனாதிபதி Moon Jae புன்னகை சிரிப்புடன் வரவேற்றார். அப்போது கிம் அவரைது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கம்பீரமாக நடந்து வந்தார்.
இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக கடந்த 1953-ஆம் ஆண்டு கொரிய போர் முற்றுகை ஒப்பந்தம் குறித்து கையெழுத்திடப்பட்டது குறித்து இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகவும், அதன் பின் சமீபத்தில் அணு ஆயுத சோதனைகளை நடத்தப் போவதில்லை என கிம் கூறியதால் அதைப் பற்றியும் பேச்சு வார்த்தை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த மாநாட்டைத் தொடர்ந்து பிற்பகலில் மர நடவு விழா ஒன்று இருப்பதாகவும் அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Kim was greeted by Moon at 9.30am local time (8.30pm EST/12.30am GMT) before the pair walked together through Panmunjom accompanied by a military band