சிறிலங்காவும் சீனாவும் இணைந்து கொழும்பில் கட்டும் பாரிய ஆடம்பர வணிக வளாகம்

கொழும்பு நகரில், மிகப்பெரிய ஆடம்பர வணிக வளாகம் ஒன்றைக் கட்டும் பணிகளை சிறிலங்காவும், சீனாவும் இணைந்து நேற்று ஆரம்பித்துள்ளன.

தெற்காசியாவின் கவர்ச்சிகரமான கொள்வனவு நகராக கொழும்பை மாற்றும் இலக்குடன், இந்தப் பாரிய ஆடம்பர வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது.

New Odel Mall என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள இந்த பாரிய வணிக வளாகத்தை அமைப்பதற்கான நிதியை Odel வணிக வளாகத்தின் உரிமை நிறுவனமான, Softlogic Holdings Limited முதலிடவுள்ளது.

சீனாவின் அரச கட்டுமானப் பொறியியல் நிறுவனம் இந்த வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

645,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த பாரிய வணிக வளாகத்தில், ‘green boulevard’ எனப்படும் வானக தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு சாதகமான அம்சங்களும் அமைந்திருக்கும்.

இந்த கட்டுமானப் பணிகள் 2020ஆம் ஆண்டில் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது.