பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.கடினமான இலக்கை விரட்டிப்பிடித்த சென்னை அணியின் கப்டன்மோனி 34 பந்துகளில் 70 ஓட்டங்களைக் குவித்தார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டோனி தனது மகளுக்கு தலை உலர வைக்கும் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் டோனி அவரது செல்ல மகள் ஜிவாவிற்கு தலைமுடியை ஹீட்டர் போட்டு காய வைக்கிறார்.டோனி ஜிவாவை சுற்றி சுற்றி அழகாக ஹீட்டர் போடும் வீடியோ மிகவும் வைரல் ஆகி உள்ளது. ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் ஷெயார்செய்து வருகிறார்கள்.
கேம் ஓவர். ஒரு சிறப்பான தூக்கம். தற்போது தந்தைக்கான பணிக்குத் திரும்பிவிட்டேன்’ எனப் பதிவிட்டுள்ள இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. வீடியோ பதிவேற்றப்பட்ட சிறிது நேரத்தில் 3.9 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர். 2.2 லட்சம் பேர் வீடியோவுக்கு லைக் செய்துள்ளமை குறிப்படத்தக்கது.
Tweets by DesiStuffs