புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது சட்டம் ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி விருப்பம் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில், முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க மற்றும் விஜேதாச ராஜபக்ச ஆகியோரையும் இணைத்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகளை அடுத்தும், விஜேதாச ராஜபக்ச, அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை மீறிய குற்றச்சாட்டை அடுத்தும் பதவி விலகியிருந்தனர்.இந்நிலையில், மீண்டும் குறித்த இருவரையும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்வதற்கு விருப்பம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது சட்டம் ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி விருப்பம் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இறுதியாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.இந்த விடயம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து குறித்த அமைச்சு பதவி ரஞ்சித் மதுமபண்டாரவிற்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது சட்டம் ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இந்த விடயம் கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.