ஊருக்குள் புகுந்த பாரிய மலைப்பாம்பினால் பரபரப்பு!!

புத்தளம் பிரதேசத்தில் நேற்றிரவு ஊருக்குள் புகுந்த பாரிய மலைப்பாம்பொன்று வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவியுடன் காட்டுக்குள் விடப்பட்டுள்ளது.புத்தளம் , முந்தல் பிரதேசத்தில் அமைந்துள்ள 100 ஏக்கர் பிரதேசத்தில் நேற்றிரவு 12 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்றை பிரதேசவாசிகள் கண்டுள்ளதுடன், அது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.உடனடியாக செயற்பட்ட பொலிஸார் பிரதேசவாசிகள் பிடித்து வைத்திருந்த மலைப்பாம்பை பொறுப்பேற்றுக் கொண்டு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு சம்பவம் குறித்து அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விடிவதற்கு முன்பாக மலைப்பாம்பை எடுத்துச் சென்று கருவலகஸ்வெவ காட்டுப் பகுதியில் விட்டுள்ளனர்.இதன்போது, பொதுமக்களும் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.