விடுதலைப் புலிகளின் புதையலைத் தேடி வடக்கிற்கு படையெடுத்த தென்னிலங்கை இளைஞர்கள் அதிரடியாக கைது!!

விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் தங்கத்தை கண்டறியவதற்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் இயந்திரங்களை எடுத்துச் சென்ற 8 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலை புலிகள் புதைத்து வைத்தாக கூறப்படும் தங்கத்தை தோண்டுவதற்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனகளுடன் எட்டு இளைஞர்கள் சென்றுள்ளனர்.இந்நிலையில், வவுனியாவில் புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வேனில் காத்திருந்த எட்டு இளைஞர்களை வவுனியா பொலிஸார் இன்று அதிகாலை 5.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.

வவுனியா நொச்சிமொட்டை பாலத்துக்கு அருகில் காவல் கடமையில் ஈடுபட்ட வவுனியா பொலிஸ்நிலையத்தின் போதை தடுப்பு பிரிவினர் நிறுத்தப்பட்ட வாகனத்தை சோதனை செய்த போது சந்தேகத்துக்குரிய பொருட்கள் வானினுள் இருப்பது கண்டறியப்பட்டது.மேலும், இதை தொடர்ந்து வேனில் சென்ற 33  32 31  44  59 வயதுடைய காலி  கிளிநொச்சி, கொழும்பு , அனுராதபுரம் , யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்த எட்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்

மேலதிக, விசாரணைகளின் பின் எட்டு சந்தேகநபர்களையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் அதுமட்டுமின்றி இவர்கள் பயன்படுத்திய வான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவிருக்கின்றது.