வலி .கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளர் மகேந்திரலிங்கம் கபிலனுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பில் இன்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.வலி.கிழக்கு பிரதேச சபையின் அச்சுவேலி தெற்கு வட்டாரத்தில் முதல்முறையாக போட்டியிட்ட ம.கபிலன் பிரதேச மக்களின் பேரபிமானத்துடன் வெற்றிபெற்று சபையின் உப தவிசாளராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
இளவயதில் மக்கள் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்பட்டு மக்களுக்கான உள்ளூர்ஆட்சிப்பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்த வேளையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த உள்ளூர் ஆட்சித்தேர்தலில், இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட ம.கபிலன் மக்களின் பேரபிமானத்துடன் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.