யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்’ வெசாக் விழாவிற்கான முன்னாயத்தங்கள் நடைபெறுகின்றன.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) முதல் 2018.05.01 ஆம் திகதி வரை யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தின் முன்பகுதியில் இவ்விழா நடைபெறவுள்ளது.இதன் போது முதன்முறையாக யாழ்ப்பாண பட்டினத்தில் புனித தாதுக்கள், காட்சிப்படுத்தல், வெசாக் வர்ண அலங்காரக்கூடு, மற்றும் வெளிச்சக்கூடுகள் காட்சிப்படுத்தல், பக்திப்பாடல் இசைத்தல், மற்றும் மூன்று நாட்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.