அடுத்த ஜனாதிபதி யார்? மகிந்த அணிக்குள் குழப்பம்….

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து மகிந்த அணிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாமரை மொட்டு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பிலான முரண்டு வெளிப்படையாகவே ஆரம்பித்துள்ளது. பஸில் ராஜபக்ஷவா? அல்லது கோத்தபாய ராஜபக்ஷவா? என்ற முரண்பாடு தோன்றியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷதான் ஜனாதிபதி வேட்பாளர் என இதுவரை காலமும் எண்ணிக்கொண்டிருந்தோம்.

ஆனால், தற்போதைய நிலையில் பெஸில் ராஜபக்ஷ வருவார் என பெரும்பாலானோர் கூறுகின்றனர் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.